• May 19 2024

என் கணவரும் இறந்திட்டாரு, அம்மா மட்டும் தான் என்று நினைத்தேன் அவங்களும் போய்ட்டாங்க- கதறி அழும் சிந்துவின் மகள்!

stella / 9 months ago

Advertisement

Listen News!

தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்திருப்பவர் தான் சிந்து. இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் தான் அங்காடித் தெரு.இந்த படத்தில், ஒரு சிறிய ரோலில் இவர் நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரமும், அவர் பேசிய வசனமும் ரசிகர்களைக் கவர்ந்தது.

தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த இவர் மார்புப் புற்றுநோய் வந்ததால் அதற்கான சிகிச்சைகளை் பெற்று வந்தார்.மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெரும் அளவிற்கு வசதி இல்லாததால் இவர் தனது வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். இருப்பினும் உடல் நிலை மோசமானதால் அண்மையில் இறப்புக்குள்ளானார்.


இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்திருந்தனர். இப்படியான நிலையில் சிந்துவின் மகள் பவித்ரா பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.

அதில், அம்மாவிற்கு கடந்த 3மாதமாகவே உடல்நிலை ரொம்ப மோசமாகிவிட்டது அவங்களால் சாப்பிடவே முடியவில்லை. அம்மாவை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்தோம். அங்கு போதிய வசதி இல்லாதால் சென்னை ஜிஎச் மருத்துவமனைக்கு அழைத்துப்போக சொன்னார்கள்.

அம்மா அங்குபோக விரும்பாததால், கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தேன். அம்மாவுக்கு லன்சில் கட்டி மற்றும் தண்ணீர் இருந்தால் அதை எடுத்தார்கள். அதன் பின் அம்மாவின் கிட்னி செயலிழந்து விட்டதால் ,ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்பட்டு கடைசியில் பிரைன் டெத்தாகி கண் மட்டும்தான் அசைந்தது என்னைப்பார்த்துக் கொண்டே இறந்துவிட்டார்கள்.


என் கணவர் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அம்மாதான் எல்லாம் என்று நினைத்து இருந்தேன் அவங்களும் என்னைவிட்டு போய்விட்டார்கள். இனி நான் குழந்தையை வைத்துக்கொண்டு எப்படி வாழப்போகிறேன் என்று தெரியவில்லை. நான் மட்டும் என் அம்மாவை விட்டு போகாமல் இருந்து இருந்தால், என் அம்மா இறந்து இருக்கமாட்டார்கள். அதை நினைத்துத்தான் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கிறேன் என்று சிந்துவின் மகள் கண்ணீர் விட்டு கதறி அழுதார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement