• Apr 28 2024

‘தசரா’ பட வெற்றி- இயக்குநருக்கு BMW காரை பரிசாக வழங்கிய பிரபலம்- படக்குழுவினருக்கு கிடைத்த தங்க நாணயங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘தசரா’. இந்த படத்தின் மூலமாக ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.  படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இப் படம் வெளியாகி 100 கோடி வசூலித்துள்ளது.இதனை கொண்டாடும் விதாமாக தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி சார்பாக  படக்குழுவினர் அனைவருக்கும் 10 கிராம் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் படத்தின் இயக்குநருக்கு BMW சொகுசு காரும் வழங்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.  இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.


இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த வாரம் தொடர்ந்து விடுமுறை தினம் வருவதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement