• May 20 2024

நடிகை ரச்சிதாவுக்கு இப்படியொரு ஹார்மோன் பிரச்சினை இருக்கின்றதா?-வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரச்சிதாவுக்கு, தொடர்ந்து சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.

ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் கதாநாயகியாக கலக்கினார். சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான ரச்சிதாவுக்கு வெள்ளைத்திரையிலும் நடிக்க மிகவும் ஆசையாம்.


ன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார். இது தவிர பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தன்னுடைய சொந்த விஷயங்களைப் பகிர்ந்திருந்தார்.


அண்மையில் ஒரு பேட்டியில் ரச்சிதா பேசும்போது, எனக்கு வித்தியாசமான ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது. பொதுவாகவே உணவு அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும், அதுதான் இயல்பான விஷயம்.

ஆனால், எனக்கு சாப்பாட்டை முகர்ந்து பார்த்தால் கூட எடை கூடி விடுகிறது. இப்படிப்பட்ட அரிய வகை ஹார்மோன் பிரச்சினையால்தான் நான் அவஸ்தைப்பட்டு வருகிறேன் என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement