• May 18 2024

லியோ படத்தின் சென்சார் சான்றிதழை பார்த்திருக்கின்றீர்களா?- இதெல்லாம் கட் செய்து விட்டார்களா?

stella / 7 months ago

Advertisement

Listen News!


மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருக்கிறார். லியோ படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ரிலீஸ் நாளை திருவிழா போல் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் இப்போதே ஆவலோடு எதிர்நோக்கியிருக்கின்றனர்.

 கண்டிப்பாக படம் வசூல் வேட்டை நடத்தும் என்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.படத்தின் ஷூட்டிங் முடிவதற்கு முன்பாகவே லியோ பிஸ்னெஸ்ஸில் பட்டையை கிளப்பியதாக தெரிகிறது. இதுவரை அந்தப் படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் பெற்று இருக்கிறது. அதே நேரத்தில் விஜய் பேசிய ஒரு வார்த்தைக்கு எதிர்ப்பும் இன்னொரு பக்கம் வந்துகொண்டிருக்கிறது.தற்போது லியோ படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. 


அதில் எத்தனை காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கிறது, என்னென்ன கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டு இருக்கிறது போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.இந்த சான்றிதழ் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement