இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அருண்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதளவில் எடுபடவில்லை. வசூலிலும் ஓரளவுதான் பெற்றுள்ளது, இதன் மூலம் தமிழ் சினிமா மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதை தொடர்ந்து குடியரசு தின விடுமுறை மற்றும் காதலர் தினம் என அனைத்தையும் டாக்கெட் செய்து, போட்டி போட்டு தமிழ் படங்கள் வெளியானது. ஆனால் அத்தனை படங்களும் தோல்வியை தான் சந்தித்தது.
ஆனால் மலையாள சினிமாவில் கிரிஷ் ஏ .டி இயக்கத்தில் நெஸ்லேன் மற்றும் மமித்தா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி ஹிட் குடுக்கும் திரைப்படமான பிரேமலு ஆனது தற்போது மலையாள திரைப்படங்களான புலிமுருகன், மஞ்சுமல் பாய்ஸ் ஆகிய படங்களின் வரிசையில் 100 கோடி clup இல் இணைந்துள்ளது.
இதனை அடுத்து தமிழ்நாட்டிலும் இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில், தமிழிலும் டப் செய்யது வெளியாக உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தமிழ் சினிமா இது போன்ற மொழி கடந்த பிளாக்பஸ்டரை எப்போது கொடுக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே பரபரப்பாக எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!