• Sep 22 2023

Biggboss 7 இல் கலந்து கொள்ளவுள்ள திருநங்கை யார் தெரியுமா?- அடடே இவங்க தான் வரப்போறாங்களா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி மவுசு உண்டு. தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் ஆண்டுதோறும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தான் நடத்தப்பட்டு வந்தது. 

ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்து லாக்டவுன் போடப்பட்டிருந்ததன் காரணமாக அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. அதிகளவில் பண்டிகைகள் வரும் அந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 


அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் வருகிற ஜூலை மாதமே தொடங்கப்பட உள்ளதாகவும் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.அதன்படி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இரண்டு சீசன்களாக திருநங்கைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். எனவே இந்த சீசனில் திருநங்கை மிலா கலந்து கெள்வார் என்று கூறப்படுகின்றது. இவர் நடிகை ஷகீலா தத்தெடுத்து வளர்த்த மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement