• May 19 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் முறையாக வெளியேறப் போவது யாரு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக் கிழமை மிகவும் பிராண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி இந்த சீசன் மிகவும வித்தியாசமாக வந்த முதல் நாளே டாஸ்க் வைத்து நான்கு பேரை வீட்டிற்கு வெளியே அனுப்பினார் பிக்பாஸ்.

அவர்கள் நான்கு பேரும் இந்த முறை நேரடியாக நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் ஒவ்வொருவருக்கும் தனி தனி லக்சுரி பாயிண்ட்ஸ் , வீடு சுத்தம் செய்பவர்கள், பாத்திரம் சுத்தம் செய்பவர்கள், பாத்ரூம் சுத்தம் செய்பவர்கள், சமைப்பவர்கள்  என அனைவரும் ஒவ்வொரு கிளப்பாக பிரிக்கப்பட்டுள்ளனர். 


அதில் உள்ள தலைவரை தேர்வு செய்ய கூட, தனி டாஸ்க் வைக்கப்பட்டது. இதனால்  சில போட்டி பொறாமைகள்... சண்டைகள் போன்றன நடைபெற்றும் வருகின்றன. இதில் ஜிபி முத்துவை பார்த்தாலே காண்டாகுது என கூறி ஜிபி முத்து ஆர்மியினரிடம் வசமாக சிக்கியுள்ளார் தனலட்சுமி.

எனவே இந்த வாரம் எலிமினேஷன் இல்ல விட்டாலும், அடுத்த வாரம் எலிமினேஷனில் தனலட்சுமி சிக்கினால்... இவரை தான் முதலில் வீட்டை விட்டு வெளியே அனுப்புவோம் என கூறி வருகின்றனர் ஜி.பி.முத்து ஆதரவாளர்கள்.டிக் டாக் செயலியில் கண்ட மேனிக்கு வீடியோ வெளியிட்டு, நெகடிவ் விமர்சனங்கள் மூலம் ஜிபி முத்து பிரபலமாகி இருந்தாலும், இவர் வெள்ளந்தியாக பேசுவது... நடந்து கொள்வது இவருக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பிக்பாஸ் மூலம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் பிக்பாஸ் வீட்டில், மகேஸ்வரியிடம் சாப்பாட்டுக்காக பிரச்சனை செய்து சிக்கிய தனலட்சுமி தற்போது ஜிபி முத்து விஷயத்திலும் சிக்கி உள்ளார். கடந்த சீசனில் கூட போட்டியாளர்கள் கணித்தது போலவே ஒவ்வொரு பிரபலங்கள் வெளியான நிலையில், இந்த முறையும் அப்படியே நடக்குமா? என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.








Advertisement

Advertisement