• May 20 2024

நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளப்போகும் பிரபலம் யார் தெரியுமா?- யாரும் எதிர்பார்க்காத சஸ்பென்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் ஹன்சிகா. இவர் தெலுஙகு ஹிந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த நிலையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

இப்படத்தில் கிடைத்த வரவேற்பைப் தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம் ,ஒரு கல் ஒரு கண்ணாடி , தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2 ,பிரியாணி, மான் கராத்தே ,ஆம்பள, புலி எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இறுதியாக மஹா என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


அறிமுகமான புதிதில் கொழுகொழுவென இருந்த இவர் தற்பொழுது உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வரும் இவர் சிம்புவுடன் காதல் வயப்பட்டிருந்தார். பின்பு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் அவரை பிரேக் அப் செய்து விட்டார்.

இந்த நிலையில் இவருக்கு வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக உறுதியான தகவல் பரவி வருகின்றது.அதற்கான ஏற்பாடுகளை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் தடல்புடலாக செய்து வருகின்றனராம்.


மேலும் ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை தொழிலதிபர் என்றும் அவர் திரைத்துறையை சேர்ந்தவர் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. இருப்பினும் அவர்களது திருமண தேதி இன்னும் வெளியாகவில்லை.இதனால் ரசிகர்கள் பலரும் ஹன்சிகாவுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement