• May 10 2024

தலைவரே வேற லெவலில் பங்கம் பண்றீங்க- ஜி.பி முத்து மாடர்ன் கவுணில் என்னவொரு ஆட்டம் போடுகிறார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் ஆரம்பத்திலேயே 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், நேற்று புதுவரவாக மைனா நந்தினியும் எண்ட்ரி கொடுத்தார். தற்போது மொத்தம் 21 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினுள் உள்ளனர்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் எதுவும் இல்லாததால் போட்டியாளர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடினார் கமல்ஹாசன். அதுமட்டுமின்றி இதுவரை நடந்த 5 சீசன்களிலும் 30 நாட்களுக்கு மேல் நடக்கும் சண்டைகளும், சச்சரவுகளும் முதல் வாரத்திலேயே நடந்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்ததாக அவர் போட்டியாளர்களிடம் தெரிவித்தார்.


மேலும் இதில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் தான் ஜி.பி முத்து.இவர் இந்த நிகழ்ச்சியில் நுழைந்ததில் இருந்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்துள்ளார். இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் விருமன் படத்தில் இடம் பெற்ற மதுரை வீரன் பாடலுக்கு வெடிங் கவுண் அணிந்து ஆடிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருவதையும் காணலாம்..



Advertisement

Advertisement

Advertisement