• Jan 20 2025

விஜய் டிவியில் ட்ரெண்டிங்கில் உள்ள 5 சீரியல்கள் எது தெரியுமா? லிஸ்ட் இதோ..

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவி சீரியல்கள் என்றாலே ஒரு காலத்தில் அதற்கு தனி மவுசு காணப்பட்டது. ஆனால் தற்போது சன் டிவிக்கு நிகராக ஏனைய தமிழ் சேனல்களும் போட்டி போட்டு புதுப்புது சீரியல்களை களம் இறக்கி வருவதால் இந்த சேனல்களுக்கு இடையே போட்டி நிலவுகின்றது. அதன்படி தற்போது சன் டிவிக்கு சமமான இடத்தை பெற்று வருகின்றது விஜய் டிவி.

விஜய் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், டான்ஸ் ஜோடி டான்ஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனித் தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகிறது. அத்துடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றும் போட்டியாளர்களுக்கும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதால் அதிகமானோர் விஜய் டிவியை சார்ந்து உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு தமிழ் சீரியல்களில் டிஆர்பி ரேட்டில் முதல் ஐந்து இடத்திற்கு முன்னேறிய விஜய் டிவி சீரியல்கள் பற்றி பார்ப்போம்.

அதன்படி, டிஆர்பி ரேட்டிங்கில் அதிகமாக மக்களை கவர்ந்த சீரியல்களாக சிறகடிக்க ஆசை, மகாநதி, நீ நான் காதல், சின்ன மருமகள், வீட்டுக்கு வீடு வாசல்படி ஆகிய சீரியல்கள் தற்போது பிரபலமாக காணப்படுகின்றன.

இவ்வாறு தமிழ் சீரியல்களின் வரிசையில் டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய சிறகடிக்க ஆசை சீரியலில், தில்லாலங்கடி கேரக்டராக காணப்படும் ரோகினிம் பொய்க்கு மேல் பொய் சொல்லிக்கொண்டு விஜயா குடும்பத்தை ஏமாற்றி வருவதோடு, முத்து மீனாவை மட்டம் தட்டி வருகிறார். ஆனால் தற்போது இந்த கதையில் அவருடைய உண்மையான மகன் க்ரிஷ் விஜயாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் கையும் களவுமாக பிடிபடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்.


சின்ன மருமகள் சீரியலில் கல்யாணத்தை வெறுத்த தமிழ் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சேதுவை காதலிக்க ஆரம்பித்துள்ளார். தற்பொழுது சேதுவிற்கு நான் தான் போலீஸ் ஸ்டேஷனில் கம்பளைண்ட் கொடுத்த விஷயம் தெரிய வந்திடுமோ என்ற பயத்தில் ஒவ்வொரு நொடியும் பயப்பட்டு வருகிறார். ஆனாலும் மறு வீட்டிற்கு வந்த தமிழ், சேது குடும்பத்துடன் ஒன்றாக உறவாடி நல்ல மருமகள் என்ற பெயரை எடுத்துள்ளார்.


மகாநதி சீரியலில் காவேரி, விஜய் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும் காதலை வெளிக்காட்டாமல் உள்ளனர். இதில் கங்கா, காவேரி பாசம் மனதை நெகிழ வைத்துள்ளது. ஆனாலும் காவிரியை பழிவாங்க அஜய்யை கல்யாணம் பண்ணி வரும் ரோகினியால் பிரச்சனை ஏற்பட்டு விடுமா என்ற கேள்வியும் தற்போது காணப்படுகிறது.


நீ நான் காதல் சீரியலில், சொல்லாமல் இருக்கும் காதலுக்கு வலு அதிகம் என்பது போல அபியும் ராகவ்வும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள். தற்போது அபிக்கு நடக்கும் கல்யாணத்திற்கு ராகவ் திடீரெனப் போகிறார். அந்த இடத்தில் அபியும் கல்யாணம் தடைபடுமா?  ராகவன் கழகம்வுடன் கல்யாணம் நடக்குமா? என்ற கோணத்தில் கதை தற்போது நகர்ந்து வருகின்றது.


அண்மையில் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பான சீரியல் தான் வீட்டுக்கு வீடு வாசல்படி. இந்த சீரியல் வந்ததுமே மக்களுக்கு பிடித்து விட்டது. நெகட்டிவாக இருக்கும் பல்லவியின் நடிப்பும் அவரது கேரக்டரும் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஒற்றுமையாக இருக்கும் அண்ணன், தம்பிகளை பிரிக்கும் விதமாக கதை நகரப் போகிறது. ஆனாலும் பார்வதி இருக்கும் வரை அந்த குடும்பம் என்றைக்குமே உடையாது என்ற அர்த்தத்தில் தற்போது இந்த நாடகம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.


இவ்வாறு இந்த ஐந்து சீரியல்களும் டிஆர்பி ரேட்டிங்கிற்குள் 5 இடங்களை பிடித்துள்ளது. இதில் சிறகடிக்க ஆசை சீரியல் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement