• Apr 26 2024

ப்ரியாணி மற்றும் கோழி இறைச்சி வகைகளை அதிகம் விரும்பி உண்ணும் நடிகைகள் யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த பல நடிகைகள் இருக்கின்றனர். அதிலும் நடிகைகள் தமது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க தினமும் உடற்பயிச்சியில் ஈடுபட்டு வருவதோடு உணவுப் பழக்க வழக்கங்களையும் கட்டுப்பாட்டுடன் பேணி வருகின்றனர்.

அந்த வகையில் சில நடிகைகள் தாம் விரும்பி உண்ணும் உணவுகள் பற்றி புதிய தகவல்  ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நயன்தாராவுக்கு அடுத்த படியாக வலம் வரும் நடிகை சமந்தாவுக்கு பிடித்த உணவு ப்ரியாணியாம்.இது தவிர பால்கோவா, டைரி மில்க் சாக்லேட், இனிப்பு பொங்கல் மற்றும் சுஷி போன்றவற்றையும் விரும்பி சாப்பிடுவாராம்.


அதே போல பான் இந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு பிடித்தது தோசையாம்.சாம்பார் மற்றும் சட்டினியுடன் மசாலா தோசை உண்ண எப்போதும் விரும்புவாராம்.


நடிகை காஜல் அகர்வால் மீண்டும் தனது பழைய உடல்நிலைக்கு திரும்பி இந்தியன் 2 படத்திற்கு தடபுடலாக தயாராகி வருகிறார். இவர் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஹைதராபாத் பிரியாணி தான்.


மேலும் ராசி கண்ணா  சீன உணவுகளையும், லெபனான் வகைகளையும் விரும்பி சாப்பிடுவாராம். தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஸ்ட்ரீட் உணவகங்களை அவர் அதிகமாக விரும்புவதாக கூறப்படுகிறது.


அருந்ததி நாயகி அனுஷ்கா ஷெட்டி. இவர் மிகவும் விரும்பி சாப்பிடுவது கோழி மற்றும் இறைச்சி உணவுகளை என புதிய தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement