• Sep 19 2024

கூலி படத்தின் ஷூட்டிங் இப்போ எங்கே நடக்குது தெரியுமா? மாஸ் காட்டும் நாகர்ஜுனா

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரை உலகின் கிங்காக காணப்படுபவர் தான் நாகர்ஜுனா. இவர் ஒரு வெற்றி படத்தை கொடுக்க பல வருடங்களாக போராடி வருகின்றார். காரணம் இவர் நடித்த படங்கள் அனைத்துமே படு தோல்வியை சந்தித்து உள்ளன. எனினும் அடுத்தடுத்து கை நிறைய படங்களோடு காணப்படுகின்றார்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை தொகுத்து வழங்கும் நாகர்ஜுனா, அதில் பிசியாக இருந்தாலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில்  நடித்து வருகின்றார்.

இந்த படத்தில் நாகர்ஜுனா வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது. அதே வேளை இது நெகட்டிவ் ஷர்ட் கொண்ட ரோலராகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் லோகேஷ் கனகராஜ்  நாகர்ஜுனாவின் கேரக்ரரை எப்படி செதுக்கி இருப்பார் என்ற ஆர்வம் தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகமாகவே காணப்படுகின்றது.

தமிழ் சினிமாவில் நாகர்ஜுனா நடித்திருந்தாலும் ரஜினிகாந்துடன் முதல் முறையாக நடிப்பதால் இந்த படம் இதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது . கூலி படத்தில் நடிப்பதற்கு நாகர்ஜுனாவுக்கு 24 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.


நாகர்ஜுனா தான் நடிக்கும் படங்களுக்கு 10 கோடிக்கு குறைவாகவே சம்பளம் வாங்கியுள்ளார். சில படங்களுக்கு ஐந்து முதல் ஆறு கோடி மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளாராம். ஆனால்  கூலி படத்திற்கு 24 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்போது கூலிப் படத்தின் ஷுட்டிங் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டு வருகின்றதாம். இதில் நாகர்ஜுனாவின் கேரக்டர் வேற லெவலில்  காணப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement