• Apr 28 2024

பிரின்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறவுள்ளது தெரியுமா?- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

டான் மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகமாகவே காணப்படுகின்றது.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் தற்பொழுது இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். தமன் இசையமைப்பில்  உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் முடிவடைந்து  இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மரியா நடித்துள்ளார். இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement