• Jul 22 2026

'அமரன்' எப்போ ரிலீஸ் ஆகிறார் தெரியுமா? சற்றுமுன் கசிந்த தகவல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தி இருந்தது.

அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் என்ற கேரக்டரில் ஒரு ராணுவ அதிகாரியாக நடித்து வருகின்றார். உண்மையான கதையை மையமாகக் கொண்டே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதுவரை இல்லாத அளவில் சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் கடுமையான உழைப்பை கொடுத்திருக்கின்றார். இதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகின்றார்.


இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மாதங்களில் அடுத்தடுத்து விஜய், சூர்யா, விக்ரம் போன்ற பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் திரைப்படமும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement