• Jul 10 2026

வேள்பாரியை கைவிட்ட சங்கரின் புது பிளான் என்ன தெரியுமா.? அடேங்கப்பா.!! வேறலெவல் ஐடியா..

shali / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் S. சங்கர் தற்போது தனது கனவுத் திட்டமாகக் கருதப்படும் ‘வேள்பாரி’ திரைப்படத்தை தொடங்குவதற்கு முன், ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக பிரம்மாண்ட செட், அதிக செலவு, சமூக கருத்துகள் மற்றும் வித்தியாசமான காட்சியமைப்புகளால் அறியப்படும் சங்கர், இந்த முறை அதற்கு நேர்மாறான பாணியைத் தேர்வு செய்திருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இந்த புதிய படம் வேகமான திரைக்கதை, தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த கதை அமைப்புடன் உருவாகும் என கூறப்படுகிறது. மேலும், முன்னணி இளம் ஹீரோக்களில் இருவருடன் தற்போது தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவரை மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகக் குறுகிய காலத்தில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடிக்க சங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தனது முழு கவனத்தையும் ‘வேள்பாரி’ போன்ற மிகப்பெரிய வரலாற்றுப் படத்திற்காக ஒதுக்க உள்ளாராம். சங்கரின் இந்த திடீர் பாணி மாற்றம் ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

Advertisement

Advertisement