• Apr 28 2024

5 நாள் முடிவில் கார்த்தியின் சர்தார் திரைப்படம் பெற்ற வசூல் எவ்வளவு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் கார்த்தி. இவர் தற்பொழுது தேர்வு செய்து நடித்து வரும் திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றுள்ளன. விருமன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம தான் சர்தார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியான இப்படத்தில் கார்த்தி பல வேடங்கள் போட்டு நடித்திருந்தார்.ராஷி கண்ணா, லைலா என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


படம் ரிலீஸ் ஆகி 5 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 27 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் வேட்டை எப்படி இருக்கிறது, மொத்தம் எவ்வளவு வசூலிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்று கார்த்தி உத்தியோபூர்வமாக அறிவித்திருந்தார்.இதனால் கார்த்தி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement