• Apr 19 2024

வாரிசு படத்திலிருந்து வெளியாகிய புதிய ஸ்டில்கள்- உங்களுக்கு இன்னும் வயசு ஆகல சேர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் நடிப்பில் தற்பொழுது மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் வாரிசு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார்.கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.இதனால் இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.


இப்படம் குடும்பம் கலந்த சென்டிமென்ட் படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், சம்யுக்தா என பல நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.


இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக் மட்டுமே வெளியான நிலையில் இப்போது படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகி இருக்கிறது. தளபதி ரசிகர்கள் அந்த புதிய புகைப்படங்களை இப்போது வைரலாக்கி வருகிறார்கள்.


மேலும் இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement