• May 22 2024

பிக்பாஸ் சீசன் 6 இன் போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு சூப்பராக ஒளிபரப்பாக வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன்6. இந்த நிகழ்ச்சியானது நேற்றுடன் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் 21 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதாவது டிக்டாக் மூலம் பிரபல்யமான தனலட்சுமி ஒரு நாளைக்கு 11 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.


அதே போல் ஒரு மாடலாகவும், காஸ்டியூம் டிசைனராகவும் அறியப்பட்டு... வெளிநாட்டில் இருந்து வந்த  நிவா... ஒரு நாளைக்கு 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை சம்பளமாக பெருகிறாராம். மேலும் 'அன்பே வா' சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குயின்சி, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக வாங்குகிறாராம்.

அதே போல் சின்னத்திரையில் விஜே வாக அறியப்பட்டு, வெள்ளித்திரையில் கதாநாயகனாக மின்ன வேண்டும் என்கிற கனவுடன் பிக்பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்துள்ள விஜே கதிரவன் ஒரு நாளைக்கு 18000 முதல் 22,000 வரை சம்பளமாக பெருகிறாராம்.

பிரபல விஜே-வும், நடிகையுமான மகேஸ்வரி ஒரு நாளைக்கு 18000 முதல் 23 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம்.

ஸ்டண்ட் அப் காமெடியனாக ஜெயித்த அமுத வாணன் ஒரு நாளைக்கு மட்டும் 23 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின், மாநில செய்தி தொடர்பாளராக விக்ரமன் ஒரு நாளைக்கு 15,000 முதல் 17,000 வரை சம்பளமாக பெறுவதாகவும் இலங்கையின் வரவாக வந்துள்ள நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜனனி ஒரு நாளைக்கு 21 ஆயிரம் முதல் 26 ஆயிரம் வரை சம்பளமாக பெருகிறாராம்.இலங்கையை சேர்ந்த பாப் பாடகரான ADK  ஒரு நாளைக்கு மட்டும் 16 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறாராம்.

கிரிக்கெட் விளையாட்டு வீரரும், மாடலுமான ராம் ராமசாமி  12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.சரவணன் மீனாட்சி, சீரியலில் நடித்து பிரபலமான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி ஒரு நாளைக்கு 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.


பிரபல சீரியல் நடிகரான மணிகண்டன் ராஜேஷ் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் முதல் 24 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம்.பிரபல மாடலான செரினாவுக்கு, 23 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்க படுவதாக கூறப்படுகிறது.

சத்யா சீரியல் மற்றும் பல்வேறு ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. இவருக்கு ஒரு நாளைக்கு 28 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர். இவர் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை சம்பளமாக பெருகிறாராம்.


பிரபல சீரியல் நடிகரான அஸீமிக்கு ஒரு நாளைக்கு மட்டும் 22,000 முதல் 25 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரான்ஸ் மாடலான ஷிவின் கணேசனுக்கு ஒரு நாளைக்கு மட்டும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

மிக சிறிய வயதிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியை கலந்து கொள்ளும் அளவுக்கு தன்னுடைய திறமையால் உயர்ந்துள்ள பாப் பாடகரான அசல் கோளாறுக்கு ஒரு நாளைக்கு 15,000 முதல் 17,000 வரை சம்பளமாக வழங்க படுகிறதாம்.

 எதார்த்தமாக கன்டென்ட் கொடுத்து வரும் ஜி பி முத்து முத்து ஒரு நாளைக்கு 15,000 முதல் 18000 வரை சம்பளமாக பெருகிறாராம்.கடைசியாக கலந்து கொண்டுள்ள மைனா நந்தினி... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளமாக பெருகிறாராம்.


அதே போல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக. நடிகர் கமல்ஹாசனுக்கு மொத்தமாக 75 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். தற்போது போட்டியாளர்களின் சம்பளம் குறித்து வெளியாகியுள்ள தகவல் யுகத்தின் அடிப்படியில் மட்டுமே வெளியாகியுள்ளது. இது அதிகார பூர்வ தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



















Advertisement

Advertisement