• May 03 2024

தமிழ் சினிமா நடிகர்களின் சொத்து மதிப்பு... முதல் இடத்தில் இருப்பவர் இவரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஆண்டுதோறும் சில முக்கியமான விஷயங்களுக்கான கருத்துக் கணிப்புகள் எடுக்கப்படும். அதில் ஒன்று தான் சொத்து மதிப்பு. குறிப்பாக நடிகர்கள் மற்றும் நடிகைகளில் யார் யார் அதிக சொத்து வைத்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ரசிகர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவார்கள்.


ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது அப்படிப்பட்ட ஒரு விவரம் தான் வெளியாகியுள்ளது. அதாவது சினிமாவில் உள்ள நடிகர்களில் அதிக சொத்து வைத்துள்ள டாப் 10 நடிகர்களின் விவரங்களின் பட்டியல் தான் வெளியாகி உள்ளது.


ஆனால் இந்த சொத்து மதிப்பு பற்றிய விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த லிஸ்ட் மட்டும் இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களினுடைய சொத்து விபரத்தினைப் பார்ப்போம். இதில் கமல்ஹாசன்- ரூ.450 கோடி, விஜய்- ரூ. 410 கோடி, ரஜினிகாந்த்- ரூ. 394 கோடி, சூர்யா- ரூ. 197 கோடி, அஜித்-ரூ.181 கோடி, விக்ரம்- ரூ. 150 கோடி, தனுஷ்- ரூ. 150 கோடி, சிவகார்த்திகேயன்- ரூ. 102 கோடி, கார்த்தி- ரூ. 95 கோடி, விஜய் சேதுபதி- ரூ. 86 கோடி சொத்துக்கு உரிமையாளராக இருக்கின்றனர்.

எனவே தமிழ் சினிமாவின் பணக்காரர் வரிசையில் கமல்ஹாசன் முதலிடத்தில் இருக்கின்றார். அதற்கு அடுத்த நிலையில் விஜய்யும், 3 ஆவது இடத்தில் ரஜினிகாந்தும் இருப்பது தெளிவாகின்றது.

Advertisement

Advertisement

Advertisement