• Mar 27 2023

அவர்கள் தமிழ் மக்களை எதிரியாகப் பார்க்கின்றார்களா?- ஆர்ஆர்ஆர் படம் பற்றி ஏ.ஆர் ரகுமான் போட்ட டுவிட்

stella / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர்.சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்தில் ராம் சரண் சீதா ராமராஜுவாகவும், ஜூனியர் என்.டி.ஆர் கொமரம் பீம் ஆகவும் நடித்திருந்த இப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

 ரூ.1100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.இப் படத்தின் நாட்டு நாட்டு பாடல் தற்போது ஆஸ்கார் இறுதி நாமினேஷனில் இடம்பெற்று இருக்கிறது. சிறந்த பாடலுக்கான பிரிவில் அந்த பாடல் இடம்பெற்று இருப்பதற்கு பலரும் வாழ்த்து கூறி இருக்கின்றனர்.


ஏற்கனவே ஆஸ்கார் வென்று இருக்கும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ட்விட்டரில் RRR படத்திற்கு வாழ்த்து கூறி இருந்தார்.ஏ.ஆர்.ரஹ்மானின் டுவிட்டுக்கு பதில் அளித்த ஒரு நெட்டிசன் "ஆந்திர மக்கள் தமிழர்களை வெறுக்கிறார்கள். ஆனால் நாம் எதிரிகளை நேசிக்கிறோம்" என ட்விட் செய்து இருக்கிறார்.

அந்த பதிவுக்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் "நாமெல்லாம் ஒரே குடும்பம். நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும்" என கூறி இருக்கிறார். 


Advertisement

Advertisement

Advertisement