• Sep 28 2025

மதராஸி திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்...!ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் பதிவு.!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராசி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. வெளியாகிய சிற்றுணர்விலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், சமூக வலைத்தளங்களில் பரவலாக  பேசப்பட்டு வருகிறது.


சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம், காதல், குற்றம் மற்றும் அதிரடிகளை இணைத்த ஒரு மெசேஜ் கொண்ட பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.


படத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலக பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

அதிலொரு முக்கியமான பதிவாக, இயக்குநர் ஷங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “Madharaasi பல சுவாரஸ்யமான தருணங்களைக் கொண்ட ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். ஏ.ஆர். முருகதாஸ் உணர்ச்சிகளை அற்புதமாக கையாண்டுள்ளார். சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்தை வித்தியாசமாகவும் அதிரடியாகவும் வழங்கியிருக்கிறார். அனிருத் BGM சிறப்பாக செயல்பட்டுள்ளது. வித்யூத் ஜம்வால் அவரது ஸ்டைலால் அசத்துகிறார். வாழ்த்துக்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மொத்த படக்குழுவினரின் ஒருங்கிணைப்பு, கதையமைப்பு மற்றும் தொழில்நுட்பத் தரம் ஆகியவை ‘மதராசி’யை ஒரு முக்கிய வெற்றிப்படமாக மாற்றி இருக்கின்றன.

Advertisement

Advertisement