• Apr 28 2024

கீர்த்தியை புடவையில் கண்டதும் காதல் பத்திக்கிச்சா ? கண்டதும் காதலா? பத்து ஆண்டு அசோக் செல்வனின் காதல் கதை!

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் , சூது கவ்வும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் அசோக் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசான இப்படம் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் படமே வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோலிவுட் சினிமாவில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துள்ளார். அசோக் செல்வன்னும் வாரிசு பட  நடிகையான கீர்த்தி பாண்டியனும் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.


அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடந்த சமயத்தில் தான் இவர்கள் இடையே காதல் மலர்ந்திருக்கும் என ரசிகர்கள் பலரும் நினைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு பின்னர் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இருவரும்  பேட்டி ஒன்றில் தங்களது காதல் மலந்தது எப்படி என கூறி இருக்கின்றார்கள்.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன்

2013 ஆம் ஆண்டு தான் கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன் முதன்முறையாக சந்தித்துள்ளனர். கீர்த்தியின் பிரெண்ட் ஒருவரின் பார்ட்டியில் கீர்த்தியை புடவையில் பார்த்துள்ளார் அசோக் செல்வன். கண்டதும் பிடிச்சு விட்டதாம்,தாெடர்ந்து  அவர் கீர்த்தியிடம் என் போனை காணவில்லை. என் நம்பருக்கு கால் பண்ணுங்க என சொல்லிருக்கிறார். அசோக் செல்வன் பேச்சை கேட்டு அவரும்  போன் பண்ணிருக்கிறார். இது தான் காதலின் தொடக்கமாம்.


இருவரும் பழகி  ஒரு வருடத்திற்கு பிறகு தனது காதலை சொல்லியுள்ளார் அசோக் செல்வன். கீர்த்திக்கும் பிடித்திருந்ததால் இருவரும் பழக ஆரம்பித்துள்ளனர். நன்றாக சென்று கொண்டிருந்த உறவில் மோதல் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் பிரேக்கப்பும் செய்துள்ளனர். மீண்டும் இந்த ஜோடி  சமாதானம் ஆகி காதலிக்க துவங்கியுள்ளனர். அதன்பின்னர் அசோக் செல்வன் முதலில் தனது வீட்டில் உள்ளவர்களிடம் கீர்த்தி பாண்டியனை காதலிப்பது குறித்தும், திருமணம் செய்து கொள்ள போவது பற்றியும் பேசினாராம். அவர்கள் வீட்டிலும் கீர்த்தியை முன்னாடியே தெரியும் என்பதால் அவர்களும் சந்தோஷத்துடன் சம்மதம் தெரிவித்துள்ளனர். வீட்டில் பேசிய பின்னரே அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனிடம் மேரேஜ் ப்ரபோஷல் செய்து, அவங்கள் வீட்டு சம்மதத்துடன் இருவரும் இணைந்துள்ளார்கள். 


Advertisement

Advertisement

Advertisement