• May 06 2024

தனக்கு தானே பெயர் வைத்த நடிகை யார் தெரியுமா? அட இது நிஜ பெயர் இல்லையா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும்   நயன்தாரா . ஐயா, சந்திரமுகி போன்ற படங்களின்மூலம் அறிமுகமாகி  தமிழில் பல  படங்களில் நடித்த்து ரசிகர்கள் மத்தியில் நிலையான இடம் பிடித்தவர். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ல் திருமணம் செய்துகொண்டார். இந்த அழகான ஜோடிக்கு உயிர், உலக் என இரட்டை மகன்களும் இருக்கிறார்கள்.


அண்மையில்  நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து ஹிந்தி திரையுலகின் என்ட்ரி கொடுத்தார். நடித்த முதல் ஹிந்தி படமே 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் நயன்தாரா என்ற பெயர் தனக்கு தானே வைத்தது என்ற செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

நயன்தாராவின் உண்மையான பெயர் தெரியுமா?
நயன்தாராவின் நிஜ பெயர் டயானா மரியம் குரியன் என்பதாகும். கல்லூரி படிக்கும்போது மாடலிங்கில் ஈடுபட்டுவந்தார் நயன்தாரா. அப்போதுதான் மலையாள இயக்குனரான சத்யன் அந்திக்காட் என்னும் இயக்குனர் நயன்தாராவின் மாடலிங் வேலைகளைப் பார்த்து அவரை படத்தில் நடிக்க வைக்கலாம் என கேட்டிருக்கிறார். நயன்தாராவும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். 


நயன்தாராவின் முதல் படம்
மனசினக்கரே என்பதுதான் அந்த படம். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் இயக்குனர் இவருடம் 'உங்களின் பெயரை மாற்ற வேண்டும் சம்மதமா? என கேட்டிருக்கிறார். நயன்தாராவும் மாறிக்கொள்ளலாம் என பதில் கூறியிருக்கிறார்.


ஆனால் நாட்கள் பல கடந்தும்  படத்திற்கும் பெயர் வைக்கவில்லை.  நயன்தாராவிற்கும் பெயர் வைக்கவில்லை. அதனால் நயன்தாராவே இயக்குனரிடம் 'எனக்கு பெயர் வைச்சீர்களா? இல்லையா' என கேட்க, '20 - 30 பெயர்கள் இருக்கிறது, அதிலிருந்து ஒரு பெயரை தேர்ந்தெடு' என அந்த பெயர் கொண்ட லிஸ்டை நயன்தாராவிடம் கொடுத்துள்ளார். .அந்த லிஸ்டில் இருந்த நயன்தாரா என்னும் பெயரை தனக்குத் தானே வைத்துக் காெண்டதாகவும் .நயன்தாரா தனக்கு தானே பெயர்வைத்த கதை இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement