• Oct 30 2024

போயும் போயும் கிரண் டயலாக்கையா சுட்டார் விஜய்? ஒரிஜினல் வீடியோ போட்டு மரண கலாய்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாட்டில் விஜய் பேசிய செயல் திட்டங்கள், கருத்துக்கள் அவருடைய ஸ்பீச் என்பன தான் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் காணப்படும் நடிகர் விஜய் மக்களுக்கு சேவை ஆற்றவே தனது கோடிக்கணக்கான சம்பளத்தை உதறித் தள்ளிவிட்டு அரசியலில் களம் புகுந்துள்ளார். சினிமாவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுவது போலவே அரசியல் களத்திலும் இவருக்கு கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் விஜய் பேசிய ஸ்பீச், பல தலைவர்களின் கருத்துக்களை காபி செய்தும் பல தலைவர்களின் கொள்கைகள், ரெபரன்ஸ் என்பவற்றை எடுத்தும் தான் தனது கட்சியின் மாநாட்டை தொடங்கியுள்ளார் என தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் படுமோசமாக  விமர்சனங்கள் எழுந்துள்ளன.

d_i_a

அதாவது தளபதி விஜய் நடிக்கும் படங்களில் ரீமேக் படங்களும் ஏனைய படங்களில் இருந்து காட்சிகளை சுட்டும் தனது படங்களில் வைத்து வருகின்றார் என்ற கருத்து இளைய தளபதி விஜய் மீது காணப்படுகின்றது. 

அதேபோல கட்சி மாநாடு இன்னொரு ரீமேக் படம் எனவும், ஆடியோ லான்ச்கே விஜய் தயார் செய்த ஸ்கிரிப்டை தான் பேசுவார் என்றும் மாநாடு அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் என நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் பண்ணி வருகின்றார்கள்.


அதன்படி, விஜய் மாநாட்டில் பேசிய, 'நம்மளுடன் சில பேர் வரலாம் இல்லையா.. அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா.. அப்படி வருகின்றவர்களையும் அன்போடு அரவணைக்கனும் இல்லையா..?' என்று விஜய் பேசியதும் காபி தான் என பங்கம் பண்ணி உள்ளார்கள் நெட்டிசன்கள்.

அதாவது விஜய் மாநாட்டில் பேசியது எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் கிரண் நடித்த படத்தில் பேசிய வசனத்தை தான் விஜய் நைசாக சுட்டு மாநாட்டில் பேசி விட்டார் என்று மரணமாக கலாய்த்து வருகின்றார்கள். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது. இதனை நெட்டிசன்கள் ஷேர் பண்ணி ட்ரோல் செய்து வருகின்றார்கள்.

Advertisement