• Jan 15 2025

இந்தியன் தாத்தாவுக்கு சீக்கிரமாவே சோலி முடிஞ்சா? ஏழாவது நாளில் மொத்தமா சரிந்த வசூல்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் கடந்த 12ம் திகதி ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் தற்போது ஏழு நாட்களைக் கடந்துள்ளது. இந்த திரைப்படம்  கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

லைகா நிறுவனம் இறுதியாக ரிலீஸ் செய்த எந்த படமும் ஓடாத நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியன் தாத்தாவை வைத்து  ப்ரொமோட் செய்து வருகிறது.

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் வெளியானது. இந்தியன்  படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படமும் அவ்வாறே இருக்கும் என்று நினைப்பிலேயே பலர் பெரிய எதிர்பார்ப்பில் தியேட்டருக்கு சென்றார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

இந்தியன் 2 படத்தின் டிரைலர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால் படம் நன்றாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கு சளிப்பை ஏற்படுத்தும் படியாக படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.


இந்தியன் 2 திரைப்படம் முதல் ஆறு நாட்களில் மொத்தமாக 68.45 கோடிகளை வசூல் செய்தது. ஆனாலும் படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகார்வபூர்வ  தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் ஏழாவது நாளில் இரண்டு கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மொத்தமாக 70 . 45 கோடிகளை வசூலித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement