பிரபல நடிகராக காணப்படும் தனுஷ் தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இந்த படத்தை தனுஷ் இயக்கியிருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களை இயக்கி தானே நடித்து வருகின்றார். அதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.
மேலும் தனுஷின் கைவசம் இளையராஜாவின் பயோபிக், குபேரா போன்ற படங்களும் கைவசம் உள்ளன. மேலும் இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக தயாரிப்பாளராகவும் காணப்படுகின்றார். இதனால் சினிமா துறையில் மிகவும் பிசியான ஒருவராக வலம் வருகின்றார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் ஹிந்தி படத்தில் நடிப்பதற்காக கண்டிஷன் போட்டு உள்ளாராம். இது தொடர்பில் வலைப்பேச்சு அந்தணன் தனது சேனலில் தெரிவித்துள்ளார்கள்.
அதன்படி அவர் கூறுகையில், தற்போது சாப்பிட நேரமில்லாமல் தூங்க நேரமில்லாமல் மிகவும் பிசியாக இருக்கின்றார் தனுஷ். இவர் அடுத்து ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ஆனால் அந்த படத்திற்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.
அதாவது படத்தின் ஷூட்டிங் 40 நாட்களுக்குள் எடுத்து முடிக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு நாள் கூட டேட் தரமாட்டேன் என தெரிவித்துள்ளாராம்.
இது அவர் நடிக்க உள்ள ஹிந்தி படத்திற்கு மட்டுமில்ல. எல்லா படங்களுக்குமே 40 நாள் தான் அவகாசம் கொடுத்துள்ளாராம். அதற்குள் தனது படப்பிடிப்புகளை எடுத்து முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக அந்தணன் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!