• Aug 08 2025

வெற்றிக்கு பிறகு அமைதி மிகவும் பாராட்டத்தக்கது.!குகேஷீக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தனுஷ்.!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் இவர் பல திரைப்படங்களில் நடித்து நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் செஸ் வீரனான குகேஷ்  அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.


தற்போது "குபேரா" படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கான இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிலே பல பிரபலங்கள் கலந்து கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .


தற்போது தனுஷ் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட பதிவு ரசிகர்களை கவனம் ஈர்த்துள்ளது. அதாவது உலகின் நம்பர் 1 வீரனை வீழ்த்தி நாட்டிற்கு பெருமை சேர்த்த குகேஷீக்கு வாழ்த்துக்கள், வெற்றிக்கு பிறகு உங்கள் அமைதி மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது எனவும் அது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கின்றது எனவும் குறிப்பிட்டிருந்தார் . இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .   

Advertisement

Advertisement