• Sep 20 2024

குக் வித் கோமாளி அஸ்வினுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி.. ஷிவாங்கி என்ன நினைப்பார்?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் பிரபலமான நிலையில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தார். இதனை அடுத்து தற்போது அவர் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த படத்தில் அவருடன் மேலும் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ ’நெருங்கி வா முத்தமிடாதே’ ’ஓ காதல் கண்மணி’ ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ உள்பட சில படங்களில் அஸ்வின் நடித்திருந்தார்.

ஆனாலும் அவரை ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காட்டியது ’குக் வித் கோமாளி’ என்ற திரைப்படம் தான். அதன் பிறகு அவர் ’என்ன சொல்ல போகிறாய்’ ‘செம்பி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் ’நொடிக்கு நொடி’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


இந்த படத்தில் ஷாம் மற்றும் நரேன் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள் என்பதும் இந்த படத்தின் நாயகியாக நம்ரிதா நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  நம்ரிதா ஏற்கனவே சில மியூசிக் வீடியோக்களில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜெயப்பிரகாஷ், அபிராமி வெங்கடாசலம், பிக் பாஸ் ஜூலி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

பிக்பாஸ் ஜூலி தான் அஸ்வினுக்கு ஜோடி என கூறப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்போது அஸ்வின் மற்றும் ஷிவாங்கி நெருக்கமாக இருந்த நிலையில் ஜூலியுடன் அஸ்வின் நடிப்பது குறித்து ஷிவாங்கி என்ன நினைத்திருப்பார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் பூஜை குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை விஜய் ஆதிராஜ் என்பவர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement