சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க, இதில் சீயான் விக்ரம் நடிப்பில் மிரட்டி இருந்தார். மேலும் அவருடன் மலையாள நடிகையான பார்வதி மற்றும் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள்.
இந்தப் படத்தில் மிக முக்கியமாக பேசப்படுவது அரசியல் தான். அதிலும் நாகர்கள், பௌத்தம், பூர்வ குடிமக்கள் என கோலார் தங்க வயலை கதைக்களமாகக் கொண்டும் மாய எதார்த்த திரை கதையை கொண்டும் இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார்.
தங்கலான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். அவருடைய பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்ததோடு மட்டுமில்லாமல் தற்போது வரையில் ட்ரெண்டிங்கிலும் காணப்படுகின்றது.
இந்தத் திரைப்படம் வெளியாகி முதல் நாளிலேயே சுமார் 26.44 கோடிகளை வசூலித்திருந்தது. இதுவே இதுவரை விக்ரம் நடித்த படங்களில் முதல் நாளிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாகவும் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் சாதனை படைத்திருந்தது.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் இயக்குனர் பா. ரஞ்சித் மீது அதிரடியாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தங்கலான் படத்தில் புத்த மதத்தை உயர்வாக காட்ட வேண்டும் என்பதற்காக வைணவ மதத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாகவும், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த காட்சிகளை நீக்கவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு சென்று தங்கலான் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடுப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!