• May 10 2024

ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பிரபல நடன இயக்குநரான ஷோபி மாஸ்டரின் மனைவி- வாழ்த்துக் கூறும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி. இதனை் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரம்மாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி இருக்கின்றார்.

இவர் லலிதா என்ற நடன இயக்குநரைத் திருமணம் செய்துள்ளார்.இவர்கள் இருவருமே இணைந்து ஒரு நடன பள்ளியை நடத்தி வருகின்றனர். திருமணம் முடித்த இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அண்மையில் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

அத்தோடு மிகவும் கோலாகலமாகவும் இவரது வளைகாப்பு இடம் பெற்றது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு தனியார் மருத்துவமனையில் லலிதா மாஸ்டர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது தாய் சேய் இருவரும் பூரண நலத்துடன் உள்ளனர்.

அன்பும் பாரட்டுக்களும் தெரிவித்த ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஷோபி மாஸ்டர் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement