வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் கோட். இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, ஜோகி பாபு, மோகன், பிரேம்ஜி உட்பட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இந்த படம் முதல் நாளிலேயே 126 கோடிகளை வசூலித்திருந்தது.
கோட் படத்தில் அதிகமான நடிகர்களை வைத்து கதை அமைத்த வெங்கட் பிரபு, தொழில்நுட்பத்திலும் அதிகமான கவனத்தை செலுத்தினார். ஆனால் படத்தின் கதை ரசிகர்களை கவர தவறி உள்ளது. இது எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை தமிழில் மட்டுமே திரையரங்குகளில் இந்த திரைப்படம் ஓடி வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இந்த படம் பான் இந்திய படமாக வெளியானது. ஆனால் கேரளா, ஆந்திரா, கன்னடா, உள்ளிட மாவட்டங்களில் உள்ள ரசிகர்களை கவர தவறி உள்ளது.
இந்த நிலையில், கோட் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது. சர்வதேச பாக்ஸ் ஆபிஸிலும் 400 கோடி ரூபாய் கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனால் இந்த படம் வெற்றி தான் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சமூக வலைத்தள பக்கங்களில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சொல்வதைப்போல கோட் படம் வசூலில் சொதப்பவில்லை, விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்துடன் கம்பேயர் செய்யும்போது கோட் படம் வசூலில் குறைந்துள்ளதாகவும் ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த படம் வெற்றி படம் தான் என்றும் பிஸ்மி கூறியுள்ளார்.
விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைந்து கோட் படம் வெளியானது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் அதனை பூர்த்தி செய்ய தவறி உள்ளது.
மேலும் விஜய்யின் அடுத்த படமான தளபதி 69 படத்தினை எச். வினோத் இயக்க உள்ளார். இதற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு நடிகர் விஜய் சினிமாவில் விலகி அரசியலில் தீவிரமாக ஈடுபட உள்ளார் என கூறிய நிலையில் அவரது அரசியல் பிரவேசம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!