• May 05 2025

"டிடிஎஃப் வாசன் மீது எத்தனை வழக்குகள்?" சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவு..

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

யூடியூப் பிரபலமான டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து தமிழ்நாடு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் தற்போது ஒரு முக்கிய வழக்கை தொடர்ந்தார். வெளிநாட்டில் திரைப்பட ஷூட்டிங்கிற்காக செல்ல தேவையான பாஸ்போர்ட் பெறக்கோரி கோவை மண்டல அலுவலகத்தில் வழக்கு தொடர்ந்துள்ள இவர் அதற்கான உத்தரவைத் தண்டிக்க கோரியுள்ளார்.


இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் அவரது வழக்கில் காவல் துறைக்கு உத்தரவு வழங்கி டிடிஎஃப் வாசன் மீது உள்ள வழக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கான நிலுவையில் உள்ள விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


மேலும் இந்த உத்தரவு இப்போது பரபரப்பை ஏற்படுத்தி பல்வேறு கருத்துக்களை முன்னிட்டுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது. மேலும் இது குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement