கடந்த பல ஆண்டுகளாக குறிப்பாக 90s கிட்ஸ்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய சேனல் என்றால் அது கார்ட்டூன் நெட்வொர்க் என்பது பலரும் அறிந்தது. இந்த நிலையில் இந்த சேனல் மூடப்படுவதாக தற்போது இணையத்தில் வேகமாக ஒரு தகவல் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’டாம் அண்ட் ஜெர்ரி’ உட்பட பல கார்ட்டூன் தொடர்கள் கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் ஒளிபரப்பாகும் என்பதும் 90s கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த சேனல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்பட இருப்பதாக அவ்வப்போது வதந்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென '#RIPCartoonNetwork' என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. ஆனால் இது குறித்த எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனிமேஷன் ஒர்க்கர்ஸ் இக்னைடட் நின்ற நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுவது போன்ற ஒரு அனிமேஷனை வெளியிட்டுள்ளது. இதிலிருந்து தான் இந்த வதந்தி வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த கார்ட்டூன் நெட்வொர்க் நிர்வாகிகள் ’கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படவில்லை, சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கும் செய்தி தவறானது, இன்னும் இந்த சேனலை தரம் உயர்த்துவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்’ என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
Listen News!