• Jan 19 2025

அர்ஜுன் தாஸ் - அதீதி சங்கர் கூட்டணியில் உருவாகும் காதல் கம்போ! வெளியான மாஸ் அப்டேட்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக காணப்படுபவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் கார்த்தி நடித்த கைதி திரைப்படம், விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் விக்ரம்  ஆகியவற்றில் நடித்து கலக்கியிருந்தார்.

இதை தொடர்ந்து அநீதி, போர் போன்ற திரில்லர் படங்களை தேர்ந்தெடுத்து தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் அர்ஜுன் தாஸ். இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் ரசிகர்களை வலுவாக கவர்ந்துள்ளது.

சமீபத்தில் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரசவாதி படம் வெளியானது. இந்தப் படமும் திரில்லர் பாணியில் உருவானதோடு அதில் இவரது நடிப்பும் அசத்தலாக காணப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தற்போது நடிகர் அர்ஜுன் தாஸ் - அதீதி சங்கர் கூட்டணியில் புதிய காதல் திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. இது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதன்படி இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஶ்ரீகாந்த் இயக்குகிறார். மேலும் 'குட் நைட்', 'லவ்வர்' படங்களை தயாரித்த நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement