• Jan 15 2025

தன் பெயர் கெட்டுவிடுமாம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிராகரித்த பிரபல நடிகர்?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு விடயம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற தகவல்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென கமலஹாசன் விலகியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கமலுக்காகவே பிக் பாஸ் பார்த்தவர்கள் ஏராளம்.

சிலர் அவருக்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவும் ஆரம்பித்தார்கள். இவ்வாறான சூழ்நிலையில் அவருக்கு  காணப்படும் பிஸியான நெருக்கடியால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி ஆரம்பித்தது. இதனால் சரத்குமார், சிம்பு, சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் என பட்டியல் நீண்டு கொண்டே போனது.

எனினும் சூர்யாவும் சிம்புவும் படங்களில் பிசியாக இருப்பதால் அவர்களும் வரமாட்டார் என சொல்லப்பட்டது. இறுதியில் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டது


பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களில் சத்யராஜ்  பேரும் அடிபட்டது. இதைப்பற்றி சத்யராஜ் ஏற்கனவே என்ன சொல்லியிருக்கின்றார் என்றால், பிக் பாஸ் என்ற ஒரு நிகழ்ச்சியை நான் தான் முதல் முதலாக ஹோஸ்ட் பண்ணுகின்றேன் என்றால் அது வேற. ஆனால் ஏற்கனவே உலகநாயகன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி இது. அப்படிப்பட்ட நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினால் கமல் பாதிப்பு தான் அதிகமாக இருக்கும்.

உதாரணமாக அமைதிப்படை படத்தின் ரீமிக்ஸ் எந்த நடிகர் வேண்டுமென்றாலும் நடிக்கலாம். ஆனால் கடைசியில் சத்யராஜ் நடித்தது போல இல்லப்பா என்று தான் சொல்லுவார்கள். அதைப்போலத்தான் நானும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால்  இந்த மாதிரி ஒரு பெயர் தான் கிடைக்கும். மேலும் படங்கள், வெப் சீரிஸ் எனப்  பிஸியாக இருக்கின்றேன். இதனால் இதை தொகுத்து வழங்க எனக்கு நேரம் இல்லை என சத்யராஜ் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement