• May 05 2024

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் பட போஸ்டரை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மிளிர்பவர் நடிகர் ரஜினிகாந்த். இந்திய சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் இவர் தற்போது தனது 169வது படமான "ஜெயிலர்" என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இப்படத்தை இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா மோகன் ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு ஆகியோரும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இப்படத்திற்கான போஸ்டர் இன்றைய தினம் வெளியாகியது. இதனை ரசிகர்கள் சமூக வரைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அப் போஸ்ட்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது.

அந்தவகையில் இது தொடர்பாக யூடியூப் சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் விமர்சனம் ஒன்றினை எழுப்பியுள்ளார். இது குறித்து இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் "வன்முறையான முகங்கள், ரத்தம், சிகரெட், போதைப் பொருட்கள், துப்பாக்கி மற்றும் ரத்தம் சொட்டும் கத்தி போன்றவற்றைக் காட்டுவதன் மூலம் இந்நடிகர்கள் 2k பூமர்களை தவறாக வழிநடத்துகின்றனர்.

எனவே சிறந்த சமூக அக்கறை வேண்டும். முக்கியமாக சூர்யா போன்ற நடிகர்களிடம்…….." எனப் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement