• Apr 25 2024

இப்படி ஒரு வீட்டில் தான் மறைந்த நடிகர் விவேக் ஆரம்பத்தில் இருந்தாரா?- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை கலந்த நடிப்பினாலும் சமூகக் கருத்துக்களைக் கூறும் பேச்சினாலும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகராக அறியப்பட்டு வலம் வந்தவர் தான் மறைந்த நடிகர் விவேக்.

இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமாக இருந்தாலும் சமூக சேவை செய்வதிலும் அதிக ஈடுபாடு காட்டி வந்தார். இதனால் அப்துல் கலாமின் வார்த்தைகளை தனது வாழ்க்கையில் கடமையாக ஏற்றுக்கொண்டு செடிகளை நட்டு வந்தவர்.

இவர் கடந்த வருடம் மாரடைப்புக் காரணமாக திடீரென இறப்புக்குள்ளானார். இவரது இறப்பினை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதோடு தற்பொழுதும் இவரது இறப்பு குறித்து மனவேதனை அடைந்து வருகின்றனர்.

மேலும் இவர் கோவில்பட்டியை தனது சொந்த ஊராக கொண்டவர். நடிப்பின் மீது கொண்ட ஆசையால் சென்னை வந்த இவர் இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். ஆனால் விவேக் பிறந்த வளர்ந்த அவரது சொந்த வீடு கோவில்பட்டியில் உள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது அவரின் சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement