• Apr 26 2024

நடிகர் ஹிருத்திக் ரோஷன் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம்-இரங்கல் தெரிவித்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான் இவர்களுக்கு மத்தியில் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யத்தை பிடித்தவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

ஏராளமான இளம் ரசிகைகளின் மனதில் கனவு நாயகனாக வலம் வரும் இவர் ஒரு பாலிவூட் நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் கூட இவரைத் தெரியாதோர் இல்லை.

இந்நிலையில் தனது நடனத்தின் மூலம் சினி உலகில் பெரிய அளவில் ரீச் ஆன பிரபல பாலிவூட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தாய்வழிப் பாட்டி பத்மா ராணி ஓம்பிரகாஷ் தனது 91 ஆவது வயதில் மும்பையில் நேற்றிரவு காலமானார்.

பிரபல திரைப்பட இயக்குநர் ஜே.ஓம் பிரகாஷின் மனைவியான இவர், வயோதிபம் தொடர்பான பிரச்சனைகளால் கணவனின் இறப்பிற்குப் பின்னர் ஹிருத்திக் ரோஷனின் குடும்பத்துடனேயே கடந்த இரண்டு வருடங்களாகத் தங்கியிருந்தார். இந்நிலையில் கடுமையான உடல் நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் நேற்றிரவு காலமானார்.

அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement