• Apr 19 2024

மூத்த கலைஞர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாமனிதன் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்சேதுபதியின் நடிப்பில் உருவான கவண் விக்ரம் வேதா போன்ற திரைப்படங்களை இயக்கியவர் தான் சீனு ராமசாமி. இவருடைய இயக்கத்தில் விஜய் சேதுபதி மூன்றாவதாக நடித்து வரும் திரைப்படம் தான் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் கூட அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

'ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ்' நிறுவனம் சார்பாக யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

https://twitter.com/seenuramasamy/status/1537575889604448256

அந்த வகையில் சீனு ராமசாமி, நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், " மாமனிதன் திரைப்படத்தின் வருகையையொட்டி என் கலை உணர்ச்சியின் தூண்டாமணி விளக்குகள், தமிழ்ச்சினிமாவின் மாமனிதர்கள் முத்தழிழ் அறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இம்மூவருக்கும் மலர் மரியாதை செய்தேன் " என சீனு ராமசாமி குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement