• Apr 28 2024

KGF நடிகர் யாஷுக்கு ஜோடியாகும் பீஸ்ட் பட நடிகை-அட சூப்பர் காமினேசஷாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவரிற்கு தமிழ் சினிமாவில் அவ்வளவிற்கு பட வாய்ப்புக்கள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தளபதி விஜயுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் வசூலில் அள்ளி குவித்தது . இவரின் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும் பட வாய்ப்புகள் குறைந்தபாடில்லை அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் நடிகை பூஜா. அதன்படி இவர் அடுத்ததாக KGF நடிகர் யாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் மூலம் முதன்முதலாக நடிகர் யாஷுடன் ஜோடி சேர உள்ளார்.

தற்காலிகமாக யாஷ் 19 என அழைக்கப்படும் இப்படத்தை நாரதன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான படத்தை இயக்கியவர் இந்த முப்தி படம் தான் தற்போது சிம்பு நடிப்பில் பத்துதலை என்கின்ற பெயரில் ரீமேக் ஆகி வருகின்றது இதனை ஒபிலி என்ற கிருஷ்ணா இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement