• May 20 2024

’ரத்னம்’ படத்தை போட்டு தள்ளிய ‘கில்லி’.. விஷாலை பங்கமாக கலாய்த்த புளூசட்டை மாறன்..!

Sivalingam / 3 weeks ago

Advertisement

Listen News!

விஷால் நடித்த ’ரத்னம்’ திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படம் ’கில்லி’ படத்தின் முதல் நாள் வசூலை கூட செய்யவில்லை என்றும் ’ரத்னம்’ படத்தை ’கில்லி’ படம் போட்டு தள்ளிவிட்டதாகவும் புளூசட்டை மாறன் தனது சமூக வலைதளத்தில் கலாய்த்து செய்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. 

ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ’ரத்னம்’ திரைப்படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்தில் ஹரியின் பழைய படங்களின் சாயல் இருக்கிறது என்றும் இன்றைய காலத்திற்கு ஏற்ற மாதிரி படம் இல்லை என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. 

ஆக்சன் காட்சிகள் நன்றாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக ஆக்சன் காட்சிகள் இருப்பதாகவும் ஹரியின் படங்களில் இருக்கும் எமோஷனல் காட்சிகள் இந்த படத்தில் மிஸ்ஸிங் என்றும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படம் ’மார்க் ஆண்டனி’ அளவுக்கு வசூல் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அறையின் ’ரத்னம்’ படத்தை கலாய்த்து ப்ளூ சட்டை மாறன் செய்த பதிவு ஏதோ:

நேற்றைய பாக்ஸ் ஆபீஸ்:

இயக்குனர் ஹரியின் முந்தைய படங்களின் ஸ்மெல் ரத்னத்தில் ஹெவியாக இருந்ததால் ரசிகர்கள் கடும் காண்டு.  கில்லி அதிரடி வசூல்.  சனி, ஞாயிறு நாட்களிலும் கில்லிதான் வின்னர்.

அடுத்த விஜய் ஆண்டனி, விஷால்  படங்கள் வரும்போது துப்பாக்கி, கத்தி போன்ற சூப்பர் ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல். அதனை டாக்கில் செய்ய.. பிச்சைக்காரன், சண்டைக்கோழிகளை இறக்க பாதிக்கப்பட்ட முகாம் தீவிர ஆலோசனை.

புதிய மொக்கை படங்களை பார்ப்பதை விட.. பழைய நல்ல படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆறுதல்.

Advertisement

Advertisement