தமிழ் சினிமாவில் பழம்பெரும் நட்சத்திரங்களின் வாழ்க்கையை வரலாற்று படமாக எடுத்து வருகிறார்கள். அண்மையில் தான் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்கு நடிகர் தனுஷ் ஒப்பந்தமானார்.. அதன் பிறகு இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவின் வாழ்க்கையும் படமாக எடுப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது பாடகி எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கையை வரலாற்று படமாக எடுக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுப்பதற்கு பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாராக உள்ளதாம். மேலும் குறித்த படத்தை கன்னட படங்களை இயக்கும் ஹிட் பட இயக்குனர் ஒருவரும் இயக்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அத்துடன், பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமியின் கேரக்டரில் நடிக்க நடிகை திரிஷா மற்றும் நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நடித்தால் இந்த படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும். எனவே இவர்களில் ஒருவர் தான் ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை சினிமா நடிகரும் youtube விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இதேவேளை கர்நாடக இசை பாடகியான எம்.எஸ் சுப்புலட்சுமி, 1998 ஆம் ஆண்டு மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!