• Sep 13 2024

மீண்டும் சீரியலில் களமிறங்கும் பிக் பாஸ் ரச்சிதா...இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்தவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி.

அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் அடுத்து எந்த புது சீரியலிலும் நடிக்காமல் இருந்தார்.

இன்னொரு பக்கம் அவரது கணவர் தினேஷ் உடன் இருக்கும் பிரச்சனை தொடர்பாக போலீசில் புகார் அளித்ததும் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மீண்டும் சேர வாய்ப்பில்லை என ரச்சிதா சமூக வலைதள பதிவுகளில் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ரச்சிதா தற்போது மீண்டும் நடிப்பில் களமிறங்கி இருக்கிறார். அவர் போலீஸ் ரோலில் நடிக்க தொடங்கி இருக்கும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இதோ அந்த வீடியோ!


Advertisement

Advertisement