அதிக வேகமாக பைக் ஓட்டியும், உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் பைக் சாகசங்களை செய்தும் தனது யூடியூப் பக்கமான ட்வின் த்ரட்டல்ஸில் பதிவிட்டு 32 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களையே கவர்ந்துள்ள டிடிஎஃப் வாசன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி டிடிஎஃப் வாசன் அதிலிருந்து தப்பிக்கவே சினிமாவை கையில் எடுத்து இருக்கிறார் என்றும் அவர் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாத சிங்கமாக டிடிஎஃப் வாசன், யாரெல்லாம் என்னை கிண்டல் பண்ணீங்களோ பெரிய ஸ்க்ரீன்ல என்னை வாயை பிளந்து பார்க்கப் போறீங்கன்னு மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இயக்குநர் செல்லம் இயக்கத்தில் கிராமத்து சப்ஜெக்டில் உருவாகி வரும் ஒரு பைக் வீரனின் கதையாக மஞ்சள் வீரன் படம் உருவாகி வருகிறது.ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே புல்லட் வண்டியில் டிடிஎஃப் வாசன் ஆக்ரோஷமாக சூலாயுதத்தை எல்லாம் எடுத்து வீசும் அளவுக்கு ஃபர்ஸ்ட் லுக் மிரட்டியது.
இந்நிலையில், அந்த படத்தின் FDFS காட்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு சமீபத்தில் அவர் லைவ் வீடியோவில் பேசும் போது வைத்த ஒரு கோரிக்கை சோஷியல் மீடியாவில் அதிகளவில் பகிரப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
மஞ்சள் வீரன் படத்துக்கு டிக்கெட் Give Away கொடுங்கண்ணா என பாசமிகு காசு இல்லாத தம்பி ஒருவர் டிடிஎஃப் வாசனிடம் கேட்க, என்னால முடிந்த வரை கிவ் அவே கொடுக்கிறேன் என சொல்லும் டிடிஎஃப் வாசன், ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்.. மஞ்சள் வீரன் FDFS டிக்கெட் கிடைச்சா சந்தோஷமா வாங்க.. வந்து படத்தை பாருங்க.. ஆனால், பிளாக்ல மட்டும் டிக்கெட் வாங்கிடாதீங்க என தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.
அந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து இவருக்கு என்னவொரு தன்னம்பிக்கை பாருங்களேன் என கலாய்த்து வருகின்றனர். மேலும், நெல்சா பிளாக் காமெடி எப்படி பண்றதுன்னு டிடிஎஃப் வாசன் சார் கிட்ட ட்யூஷன் போங்க என்றும் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது .
TTF Vasan requested his fans to don't buy black tickets for 'Manjal Veeran'pic.twitter.com/6UiMQfuNvD
Listen News!