• Apr 26 2024

யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் பிக் பாஸ் அசல் கோளார்.. புகைப்படத்துடன் இதோ

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 ல் முதல் வாரத்தில் இருந்தே பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் வீட்டில் போட்டியாளர்கள் இடையே சண்டை மற்றும் மோதல்கள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அசல் கோளாறு பல பெண்களிடம் தகாத வகையில் தொட்டு மோசமாக நடந்து கொண்டு இருக்கிறார்.


இதனால் நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி தரும் பொழுது பலரும் இவரை ரசித்தார்கள். ஆனால் தற்போது இவர் செய்து வரும் செயலால் அசல் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.


ஆம் பல முகம் சுழிக்கும் வகையில் அசல் நடந்துகொள்ளும் விதம் பலரையும் கடுப்பாக்கியுள்ளது. இந்நிலையில், பாடகர் அசல் கோளார், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement