பிக்பாஸ் பிரபலமான நடிகர் தர்ஷன் தற்போது ஒரு பெரிய பார்கிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சென்னையில் கார் பார்க்கிங் செய்யும் போது ஏற்பட்ட தகராறு தற்போது பொலிஸுக்கு புகாராக மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மேலும் அதிகரித்து தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று மாலை தர்ஷன் மற்றும் அவரது சகோதரன் லோகேஷ் இருவரும் நீதிபதியின் மகன் அதிச்சூடி, அவரது மனைவி லாவண்யா மற்றும் மாமியார் மகேஸ்வரி ஆகியோரிடம் ஆபாச வார்த்தைகளை பேசியதாகவும் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சிறிய பார்கிங் பிரச்சனை வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு மாறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் வைத்து தர்ஷனிடம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் நீதிபதியின் மகன் அளித்த புகாரின் பேரில் தர்ஷன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் 6 மணி நேர விசாரணையை தொடர்ந்து இவரை பொலிஸார் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
Listen News!