• Apr 05 2025

விக்ரம் படத்திற்கு சூப்பர் ஸ்டார் பட தலைப்பு..!

Mathumitha / 8 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் "வீர தீர சூரன் " படத்தின் பின்னர் இவர் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகின்றார். மேலும் இவர் அடுத்து மடோ நஸ்வினுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக பல மாதங்களின் முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.


சமீபத்தில் விருத்தம்பாக்கத்தில் இந்த படத்திற்கு ஆபிஸ் போட்டு free production வேலைகள் நடந்து வ்ருவதுடன் அடுத்த மாதம் படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தில் நடிப்பதற்கு விக்ரம் 55 கோடி சம்பளம் வங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மற்றும் இந்த படத்திற்கு வீரமே ஜெயம் எனும் தலைப்பினை வைப்பதற்கு தீர்மானித்துள்ளனர். இப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மாவீரன் எனும் சிவகார்த்திகேயன் படத்தில் வீரமே ஜெயம் எனும் இந்த வசனம் வருவதால் இந்த தலைப்பினை தெரிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் இந்த தலைப்பு செட் ஆகாவிடின் ரஜினி படத்தின் தலைப்பு ஒன்றினை இந்த படத்திற்கு வைப்பதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement