• Sep 26 2023

Bigg boss அபிராமிக்கு என்னாச்சு..? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம். ஆனாலும் இவர் சக போட்டியாளரான முகேன் உடன் இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளின் காரணமாக குறைந்த வாக்குகளை பெற்று 56 நாட்களில் வெளியேறினார்.


மேலும் இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்து தான் பின்னர் 'நோட்டா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' என்ற படத்தில் பாத்திமா பாபு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.


இவ்வாறாக சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் கால் பதித்திருந்தாலும் இவருக்குப் பெரிதளவில் பட வாய்ப்புக்கள் எதுவும் அமையவில்லை. இதனால் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.


இந்நிலையில் அபிராமி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. அதில் அவர் முகம், தோல் சுருங்கி பார்ப்பதற்கு வயோதிபப் பெண் போல் தோற்றமளிக்கின்றார். 

இதோ அந்தப் புகைப்படம்..!


Advertisement

Advertisement

Advertisement