• Sep 27 2023

ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா.. ரூம் பாய் செய்த காரியம் - தப்பித்து ஓடிய பிரபல நடிகை..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கில் 2009ம் ஆண்டு வெளியான போனி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் க்ரித்தி கர்பந்தா. அதனை தொடர்ந்து கன்னடத்தில் சிரு படத்தில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் சான்டல்வுட்டில் குவிந்தன.


அப்படி பெங்களூரில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் நடிகைக்கு இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்ததாக சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதாவது;- கன்னட படத்தில் நடிப்பதற்காக பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது அங்கே ரகசிய கேமரா வைத்திருந்தது அதிர்ச்சியை அளித்தது என்றார்.


எப்போதுமே நானும் என் அசிஸ்டன்ட்டும் ஹோட்டல்களில் ரூம் புக் செய்தால் ரூமுக்குள் நுழைந்ததும் பாத்ரூம் மற்றும் படுக்கை அறை என அனைத்து இடங்களிலும் ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என்றும் ஏதாவது சந்தேகப்படக்கூடிய பொருட்கள் உள்ளனவா என்பதை பார்த்து விடுவோம்.


அப்படி அன்று அந்த அறைக்குள் நுழைந்ததும் தேடிப் பார்த்ததில், செட் டாப் பாக்ஸ் கீழ் ஒரு ரகசிய கேமராவை ரூம் பாய் வைத்திருப்பதை கண்டுபிடித்து விட்டோம். நல்ல வேளை எந்தவொரு அந்தரங்க வீடியோக்களும் வெளியாகவில்லை என்பதை உணர்ந்து கொண்டு ஹோட்டலை விட்டே உடனடியாக காலி செய்து வேறு ஹோட்டலுக்கு சென்று விட்டோம் எனக் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement