• May 22 2024

பிக்பாஸ் போறதுக்கு முன்னாடி தாமரைக்கு Phone செஞ்ச GP முத்து!- அடடே இதனால தான் அந்த ஷோவுக்குள்ளேயே போனாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்பொழுது 50 நாட்களை எட்டியுள்ளது. நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறியிருந்தார்.மேலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் விளையாடி வரும் விதமும் டாஸ்க்கின் அடிப்படையில் சற்று மாறிக் கொண்டே இருப்பதாகவும் பார்வையாளர்கள் கருதி வருகின்றனர்.

அதே வேளையில் என்ன டாஸ்க் வந்தாலும், தாங்கள் பாதுகாப்பாக அடுத்தடுத்த வாரங்களில் தொடர்ந்து தங்களை பிக்பாஸ் வீட்டில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சிலர் விளையாடி வருகின்றனர்.இதில் போட்டியாளராக களமிறங்கியவர்களில் ஒருவர் தான் ஜி.பி முத்து.


இவர் மகனைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தானாகவே வீட்டை விட்ட வெளியேறியிருந்தார்.இந்த நிலையில், கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக வந்த தாமரை, தற்போது ஜிபி முத்து குறித்து பேசியுள்ள விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது. "நாங்க எல்லாம் 40 நாள் கழிச்சு தான் சண்டை போடவே ஆரம்பிச்சோம் ஆனா இப்போ இரண்டாவது நாளிலேயே சண்டை போட ஆரம்பிச்சுட்டதா கேள்விப்பட்டேன்" என்றார்.

அதே போல இந்த சீசனில் முதல் இரண்டு வாரங்கள் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜி பி முத்து குறித்து பேசிய தாமரை, "பாவம்ங்க அவரு. பிக்பாஸ் போவதற்கு முன்பு எனக்கு ஜிபி முத்து அழைத்து பேசியிருந்தார்.



உங்களைப் பார்த்து தான் பிக்பாஸ் போக ஆசை வந்தது என கூறினார். அண்ணே சமாளிச்சுருவீங்களான்னு கேட்டேன். அப்படி இப்படி நடக்கும்ன்னு சொன்னேன்" என தாமரை தெரிவித்தார்.அதே போல முந்தைய சீசன் போட்டியாளர்கள் குறித்தும், தான் யார் யாருடன் நட்பில் உள்ளார் என்பது குறித்தும் பல விஷயங்களை தாமரை இந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். முந்தைய சீசனில் போட்டியாளராக இருந்த ஐக்கி பெர்ரி தனக்கு உதவியது குறித்தும் நெகிழ்ச்சியாக சில கருத்துக்களை தாமரை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement